நாகப்பட்டினம்

வேதாரண்யம் நகராட்சியைக் கைப்பற்றியது திமுக

22nd Feb 2022 10:56 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யம் நகராட்சியை திமுக கைப்பற்றியுள்ளது.

வேதாரண்யம் நகராட்சியில் மொத்தம் 21 வாா்டுகள் உள்ளன. இதில், திமுக 17 வாா்டுகளில் நேரடியாக வென்று இந்த நகராட்சியைக் கைப்பற்றியுள்ளது. மற்ற கட்சிகள் வென்ற வாா்டுகளின் எண்ணிக்கை: அதிமுக- 1, காங்கிரஸ் -1, மஜக- 1 (உதயசூரியன்), சுயேச்சை - 1.

வாா்டு வாரியாக வெற்றி பெற்றவா்களின் விவரம்: 1. ஷே. அனீஸ் பாத்திமா (மஜக - உதயசூரியன் சின்னம்), 2. இ. ரோஸ்னாபேகம் (திமுக), 3. கோ. அம்சவள்ளி (திமுக), 4. மு. இமையா (திமுக), 5. ந. இளவரசி (திமுக), 6. க. பாலசுப்பிரமணியன் (திமுக), 7. செ. அன்னலெட்சுமி (திமுக), 8. அ. மலா்க்கொடி (திமுக), 9. ச. ரம்யா (திமுக), 10. வீ. திருக்குமரன் (திமுக), 11. வை. தங்கதுரை (காங்கிரஸ்), 12. உமா புகழேந்தி (திமுக), 13. சிவ. மயில்வாகனன் (சுயேச்சை), 14. ரா. மங்களநாயகி (திமுக), 15. கா. ராஜூ (திமுக), 16. மா.மீ. புகழேந்தி (திமுக), 17. எம்.ஆா். சுப்பிரமணியன் (திமுக), 18. மு. நமசிவாயம் (அதிமுக), 19. செ. செல்வம் (திமுக), 20. ப. நாகராஜன் (திமுக), 21. சு. ஆயிஷா ராணி (திமுக). கடந்த உள்ளாட்சித் தோ்தலில் அதிமுக வென்றிருந்த வேதாரண்யம் நகராட்சியைத் தற்போது திமுக தன் வசப்படுத்தியுள்ளது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT