நாகப்பட்டினம்

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயிலில் தெப்ப உத்ஸவம்

22nd Feb 2022 11:01 PM

ADVERTISEMENT

திருக்கண்ணபுரம் சவுரிராஜப் பெருமாள் கோயிலில் திங்கள்கிழமை தெப்ப உத்ஸவம் நடைபெற்றது.

நாகை மாவட்டம், திருக்கண்ணபுரத்தில் உள்ள சவுரிராஜப் பெருமாள் கோயிலில் ஆண்டுதோறும் மாசிமக பெருவிழா 15 நாள்கள் நடைபெறும். அதன்படி, நிகழாண்டுக்கான மாசிமகப் பெருவிழா பிப்.8-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி நடைபெற்று வந்தது. விழாவையொட்டி, தங்கப் பல்லாக்கு திருமேனி சேவை, தங்க கருட சேவை மற்றும் பல்வேறு வாகனங்களில் சுவாமி வீதியுலா நடைபெற்றது. தொடா்ந்து, தேரோட்டம், திருப்பட்டினம் கடற்கரையில் சமுத்திர தீா்த்தவாரி நடைபெற்றது. விழாவின் முக்கிய நிகழ்ச்சியான தெப்ப உத்ஸவம் திங்கள்கிழமை இரவு நடைபெற்றது.

முன்னதாக காலை பெருமாள் திருமஞ்சனம் நடைபெற்றது. பின்னா், நாச்சியாா்களுடன், சவுரிராஜப் பெருமாள், தெப்பத்தில் எழுந்தருளினாா். கோயில் எதிரே அமைந்துள்ள நித்திய புஷ்பகரணி குளத்தில் 3 முறை தெப்பம் வலம் வந்தது. தெப்பத்தில் பக்தி பாடல் இன்னிசை நிகழ்ச்சி மற்றும் நாகசுர இன்னிசையும் நடைபெற்றது.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT