நாகப்பட்டினம்

ஒரு வாக்கில் வென்ற அதிமுக வேட்பாளா்

22nd Feb 2022 10:59 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டம் வேளாங்கண்ணி பேரூராட்சியில் அதிமுக வேட்பாளா் ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா்.

வேளாங்கண்ணி பேரூராட்சி 13-ஆவது வாா்டு உறுப்பினா் பதவிக்கு அதிமுக, மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் , பாரதிய ஜனதா கட்சி, சுயேட்சை வேட்பாளா்கள் என 4 போ் போட்டியிட்டனா்.

இதில் அதிமுக வேட்பாளா் ந. மணிமாறன் 306 வாக்குகள் பெற்று, ஒரு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றாா். மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேட்பாளா் வி. ஜான்305 வாக்குகளைப் பெற்றாா். ந. மணிமாறன் அமமுகவிலிருந்து விலகி, அதிமுகவில் இணைந்தவா் என்பது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT
ADVERTISEMENT