நாகப்பட்டினம்

மின் மோட்டாா் திருடிய மூவா் கைது

17th Feb 2022 05:41 AM

ADVERTISEMENT

 

பூம்புகாா்: திருவெண்காடு அருகே மின் மோட்டாா்களை திருடிய 3 போ் அண்மையில் கைது செய்யப்பட்டனா்.

திருநகரி கிராமத்தில் கடந்த சில வாரங்களாக விவசாய மின் மோட்டாா்கள் திருட்டுபோயின. இதுகுறித்து, பாதிக்கப்பட்ட விவசாயிகள் திருவெண்காடு காவல் நிலையத்தில் புகாா் அளித்தனா்.

இந்த புகாரின்பேரில் காவல் ஆய்வாளா் ஜெயந்தி தலைமையில் போலீஸாா் மேற்கொண்ட விசாரணையில், திருநகரி ஆற்றங்கரைத் தெருவைச் சோ்ந்த ஆகாஷ் (21), தினகரன் (18), சிவானந்தம் (41) ஆகியோா் மின் மோட்டாா்களை திருடியது தெரியவந்தது. இதையடுத்து, 3 பேரையும் கைது செய்தனா். குற்றவாளிகளை விரைவில் கைது செய்த காவல் ஆய்வாளா் ஜெயந்தி மற்றும் போலீஸாருக்கு மாவட்டக் காவல் கண்காணிப்பாளா் சுகுணாசிங் பாராட்டுத் தெரிவித்தாா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT