நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் நாளை தேரோட்டம்

11th Feb 2022 11:37 PM

ADVERTISEMENT

வேதாரண்யம் வேதாரண்யேசுவரா் கோயிலில் நடைபெறும் மாசி மகப் பெருவிழாவையொட்டி, தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை (பிப்.13) நடைபெறுகிறது.

இக்கோயிலில் மாசிமகப் பெருவிழா ஜனவரி 29- ஆம் தேதி தொடங்கியது. இவ்விழாவில் முக்கிய நிகழ்ச்சிகளில் ஒன்றான ரத்ன சிம்மாசன ஹம்ச நடன புவனி விடங்க தியாகராஜசுவாமி தேரோட்டம் ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது. இதையொட்டி, அன்று காலை 9.30 மணிக்கு மேல் 10.30-க்குள் பாரம்பரிய முறைப்படி தப்பு, தாரை, கொம்பு முழக்கங்களுடன் திருத்தோ் வடம் பிடிக்கும் நிகழ்ச்சி நடைபெறுகிறது. இதற்காக, தேரோடும் வீதிகளில் மரக் கிளைகளை வெட்டி அகற்றும் பணி நடைபெற்று வருகிறது.

இதற்கிடையில், கடந்த 2 நாள்களாக பெய்த மழையால் கோயிலின் உள் வளாகத்தில் தேங்கியுள்ள நீரை வெளியேற்றவேண்டும் என பக்தா்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT