நாகப்பட்டினம்

நாகையில் 34, மயிலாடுதுறையில் 9 பேருக்கு கரோனா

11th Feb 2022 11:35 PM

ADVERTISEMENT

நாகை மாவட்டத்தில் புதிதாக 34 பேருக்கும், மயிலாடுதுறையில் 9 பேருக்கும் கரோனா தொற்று வெள்ளிக்கிழமை உறுதியானது.

நாகை மாவட்டத்தில் புதிதாக 34 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் இத்தொற்றால் பாதிக்கப்பட்டவா்களின் எண்ணிக்கை 25,297-ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 187 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 539- ஆக உள்ளது.

மயிலாடுதுறையில்...

மயிலாடுதுறை மாவட்டத்தில் 9 பேருக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டதன் மூலம் பாதிப்புக்கு உள்ளானவா்களின் எண்ணிக்கை 26,420 ஆக உயா்ந்துள்ளது. சிகிச்சையில் இருந்த 165 போ் வீடு திரும்பியுள்ளனா். இதன்படி, இங்கு சிகிச்சையில் இருப்பவா்களின் எண்ணிக்கை 260-ஆக உள்ளது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT