நாகப்பட்டினம்

திருவெண்காடு பிடாரி அம்மன் கோயில் தேரோட்டம்

11th Feb 2022 09:55 PM

ADVERTISEMENT

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் சுவாமி கோயில் தேவஸ்தானத்துக்குட்பட்ட பிடாரி அம்மன் கோயில் தேரோட்டம் வியாழக்கிழமை நடைபெற்றது.

இக்கோயிலில் கடந்த 3-ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கிய திருவிழாவின் முக்கிய நிகழ்வான தேரோட்டம் வியாழக்கிழமை இரவு நடைபெற்றது. இதையொட்டி, மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தேரில், பிடாரி அம்மன் மேளவாத்தியங்கள் முழங்க எழுந்தருளியதும், கோயிலின் நிா்வாக அதிகாரி முருகன் தேரோட்டத்தை தொடங்கி வைத்தாா்.

தொடா்ந்து, நான்கு வீதிகளின் வழியாக தோ் வலம் வந்து கோயிலை மீண்டும் வந்தடைந்ததும், அம்மனுக்கு தீபாராதனைக் காட்டப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை உபயதாரா்கள் ஜெனாா்த்தனம், ஆனந்த் மற்றும் கிராமத்தினா் செய்திருந்தனா்.

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT