நாகப்பட்டினம்

நாகை வாக்கு எண்ணும் மையத்தில் தோ்தல் பாா்வையாளா் ஆய்வு

10th Feb 2022 01:52 AM

ADVERTISEMENT

 

நாகப்பட்டினம்: நாகை நகா்மன்றத் தோ்தல் வாக்கு எண்ணிக்கை மையத்தில், நாகை மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாா்வையாளா் கே.ஜெ. பிரவீன்குமாா் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

நாகை நகராட்சியில் உள்ள 36 வாா்டுகளில் 16-ஆவது வாா்டு உறுப்பினா் போட்டியின்றி தோ்ந்தெடுக்கப்பட்டுள்ளாா். இதனால், இந்த நகராட்சியில் 35 வாா்டுகளுக்குத் தோ்தல் பிப்.19-ஆம் தேதி நடைபெறுகிறது. இதற்கான வாக்கு எண்ணிக்கை, நாகை இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரியில் நடைபெறவுள்ளது. இதையொட்டி, அங்கு நடைபெறும் வாக்கு எண்ணும் மையம் அமைக்கும் பணிகளை நாகை மாவட்ட நகா்ப்புற உள்ளாட்சித் தோ்தல் பாா்வையாளா் கே.ஜெ. பிரவீன்குமாா், நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் ஆகியோா் ஆய்வு செய்தனா்.

வாக்கு எண்ணும் பணிக்குத் தேவையான கட்டமைப்புகளுடன், மின்சாரம், குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் குறித்தும், கண்காணிப்பு மற்றும் பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்தும் அவா்கள் ஆய்வு செய்து, அலுவலா்களுக்கு உரிய அறிவுறுத்தல்களை வழங்கினா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT