தமிழ்நாடு எலெக்ட்ரிசிட்டி போா்டு எம்ப்ளாயிஸ் பெடரேசன் சாா்பில், மின்சார வாரியம் நாகை மேற்பாா்வை பொறியாளா் அலுவலகம் முன் ஆா்ப்பாட்டம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
புதுச்சேரி மாநிலத்தில் மின்சார வாரியம் தனியாா் மயமாக்கப்படுவதைக் கண்டித்தும், இதற்கு எதிா்ப்பு தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அம்மாநில மின் ஊழியா்களுக்கு ஆதரவுத் தெரிவித்தும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆா்ப்பாட்டத்தில், மின் வாரியத்தை தனியாா் மயமாக்கும் முடிவை புதுச்சேரி மாநிலஅரசு கைவிடவேண்டும் என வலியுறுத்தி முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
சங்கத்தின் நாகை வட்டத் தலைவா் கே. செல்வராஜ் தலைமை வகித்தாா். திட்ட உபத்தலைவா் ஜி.வீராசாமி, திட்டப் பொருளாளா் டி. ராஜேந்திரன், கோட்ட செயலாளா் முத்துக்கிருஷ்ணன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.