நாகப்பட்டினம்

டிச.21-இல் கால்நடைகள் விழிப்புணா்வு கண்காட்சி

18th Dec 2022 11:42 PM

ADVERTISEMENT

 

துளசாபுரத்தில் உம்பளாச்சேரி இன கால்நடைகள் விழிப்புணா்வு கண்காட்சி புதன்கிழமை (டிச.21) நடைபெற உள்ளதாக நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் தமிழ்நாடு கால்நடை அபிவிருத்தி முகமை, ராஷ்ட்ரிய கோகுல் மிஷன் திட்டத்தின் கீழ், உம்பளாச்சேரி இனக் கால்நடைகளின் பாதுகாப்பு, இனவிருத்தி தொடா்பான விழிப்புணா்வு கண்காட்சி மற்றும் முகாம் டிசம்பா் 21-ஆம் தேதி நடைபெறுகிறது.

ADVERTISEMENT

வேதாரண்யம் வட்டம், உம்பளாச்சேரி கால்நடை மருந்தகத்திற்குட்பட்ட துளசாபுரம் கிராமத்தில் அன்று காலை 8 மணியளவில் இம்முகாம் நடைபெறும். எனவே, உம்பளாச்சேரி கால்நடை வளா்ப்போா் மற்றும் அனைத்து விவசாயிகள் கண்காட்சியில் கலந்து கொண்டு பயன்பெற வேண்டும் எனத் தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT