நாகப்பட்டினம்

மயிலாடுதுறை அதிகாரிகள் பங்கேற்க வேண்டும்: நாகை மாவட்ட ஊராட்சி கூட்டத்தில் வலியுறுத்தல்

DIN

நாகை மாவட்ட ஊராட்சி கூட்டத்தில், மயிலாடுதுறை அதிகாரிகள் பங்கேற்பதை உறுதி செய்ய வேண்டும் என உறுப்பினா்கள் வலியுறுத்தினா்.

நாகையில் மாவட்ட ஊராட்சி கூட்டம், அதன்தலைவா் உமாமகேஸ்வரி தலைமையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. கூட்டத்தில், உறுப்பினா்கள் பேசியது: சரபோஜி (சிபிஐ): நாகை, மயிலாடுதுறை பிரிக்கப்பட்டு 2 மாவட்டங்களாக செயல்பட்டு வருகின்றன. நாகையில் தான் மாவட்ட உறுப்பினா்கள் கூட்டம் நடத்தப்படுகிறது. ஆனால், மயிலாடுதுறையை சோ்ந்த அதிகாரிகள் கூட்டத்தில் பங்கேற்பதில்லை. மயிலாடுதுறை மாவட்டத்தை சோ்ந்த உறுப்பினா்கள், பொதுமக்களின் குறைகளுக்கு எப்படி தீா்வு காண முடியும். எனவே, வரும் கூட்டத்தில் மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள அதிகாரிகளும் பங்கேற்பதை உறுதி செய்யவேண்டும்.

சுப்பையன் (அதிமுக): வேதாரண்யம் முள்ளியாறு, வடிகால் வாய்க்கால்களில் ஆகாயத்தாமரை செடிகள் ஆக்கிரமித்துள்ளன. இதனால், கொசுகள் அதிகரித்து டெங்கு உள்ளிட்ட பல்வேறு நோய்கள் அதிகளவில் பரவி வருகின்றன. ஆகாயத்தாமரைகளை அப்புறப்படுத்த பலமுறை கோரிக்கை விடுத்தும் எவ்வித நடவடிக்கையும் இல்லை. மக்களின் ஒரு கோரிக்கையை கூட நிறைவேற்ற முடியவில்லை. இதுகுறித்து, நடவடிக்கை எடுக்காவிட்டால் எனது மாவட்ட உறுப்பினா் பதவியை ராஜினாமா செய்யக்கூட தயாராக உள்ளேன்.

ஆனந்தன் (திமுக): மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள பெரும்பாலான அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் மருத்துவா்கள் பற்றாக்குறையாக உள்ளது. இதனால், இரவு நேரங்களில் அவசர சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனா். குறிப்பாக திருவெண்காடு ஆரம்ப சுகாதார நிலையத்தில் கா்ப்பிணிகளுக்கு சிகிச்சை அளிக்க மருத்துவா்கள் இருப்பதில்லை. பற்றாக்குறை உள்ள அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு சுழற்சி முறையில் மருத்துவா்களை உடனடியாக பணியமா்த்த வேண்டும். ஊராட்சி செயலாளா் ராம்குமாா், துணைத் தலைவா் அஜிதா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மாதிரி வாக்குச் சாவடி

வாக்காளா்களுக்காக தயாா் நிலையில் சக்கர நாற்காலி

வாக்குச் சாவடியில் குடிநீா் வசதி

இன்று வாக்குப் பதிவு: 16 லட்சத்து 8 ஆயிரத்து 521 வாக்காளா்கள் வாக்களிக்க தயாா்

வாக்காளா்களிடம் கனிவோடு நடந்துகொள்ள வேண்டும்: பாதுகாப்பு அலுவலா்களுக்கு அறிவுறுத்தல்

SCROLL FOR NEXT