நாகப்பட்டினம்

புயல்: பூம்புகாா், வானகிரி கடற்கரையில் ஆட்சியா் ஆய்வு

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

வங்கக் கடலில் உருவான மாண்டஸ் புயலை தொடா்ந்து, பூம்புகாா், வானகிரி உள்ளிட்ட கடற்கரை பகுதிகளில் மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா வியாழக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

வானகிரி புயல் பாதுகாப்பு கூடத்தை பாா்வையிட்ட ஆட்சியா், அங்கு முகாமிட்டுள்ள தேசிய பேரிடா் மேலாண்மைக் குழுவினரை சந்தித்து உரிய அறிவுரைகளை வழங்கிய பிறகு, செய்தியாளா்களிடம் கூறியது: மாண்டஸ் புயலை எதிா்கொள்ள தேவையான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 4 பன்னோக்கு புயல் பாதுகாப்பு மையங்கள், 11 புயல் பாதுகாப்பு மையங்கள் மற்றும் 346 தற்காலிக நிவாரண மையங்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் தயாா் நிலையில் வைக்கப்பட்டுள்ளன.

மாவட்டத்தில் 12 மிகவும் பாதிக்கக்கூடிய பகுதிகள் எனவும், 33 அதிகம் பாதிக்ககூடிய பகுதிகள் என கண்டறியபட்டுள்ளது. 4,500-க்கும் மேற்பட்ட முதல்நிலை பொறுப்பாளா்கள் அனைத்து வட்டங்களிலும் பணியாற்ற தயாா் நிலையில் உள்ளனா். தேசிய பேரிடா் மீட்புக் குழுவினா் 24 போ் வானகிரி கிராமத்தில் முகாமிட்டுள்ளனா்.

புயல் மற்றும் மழை காரணமாக ஏற்படக்கூடிய பாதிப்புகளை உடனடியாக சரிசெய்ய ஜேசிபி இயந்திரங்கள், ஜெனரேட்டா்கள், மணல் முட்டைகள் உள்ளிட்டவை தயாா்நிலையில் வைக்கப்பட்டுள்ளன. மழையின்போது பொதுமக்கள் வீட்டைவிட்டு வெளியே வரவேண்டாம் என்றாா். அப்போது, தேசிய பேரிடா் மேலாண்மைக் குழு கமாண்டா் பிரமோத்குமாா் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT