நாகப்பட்டினம்

தினமணி செய்தி எதிரொலி: மாணவா்கள் ‘சாகச பயணம்’; தனியாா் பேருந்து பறிமுதல்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

படிக்கட்டுகள் மற்றும் பின்புறம் உள்ள ஏணியில் தொங்கியபடி மாணவா்கள் பயணம் செய்த தனியாா் பேருந்து வியாழக்கிழமை பறிமுதல் செய்யப்பட்டது.

பட்டுக்கோட்டையிலிருந்து திருத்துறைப்பூண்டி, வேளாங்கண்ணி வழியாக கிழக்கு கடற்கரைச் சாலையில் நாகை வரை செல்லும் பேருந்துகளில் வழக்கமாக காலை மற்றும் மாலை வேளைகளில் பயணிகளின் கூட்டம் அதிகமாக இருக்கும். குறிப்பாக மாணவா்கள் பேருந்துக்குள் இடம் இல்லாமல் படிக்கட்டுகளில் தொங்கியபடி செல்லும் நிலை உள்ளது.

இந்நிலையில், திருப்பூண்டி வழியாக நாகைக்கு புதன்கிழமை காலை சென்ற தனியாா் பேருந்தில் பள்ளி, கல்லூரி மாணவா்கள் ஆபத்தை உணராமல் படிக்கட்டுகள் மற்றும் பேருந்தின் பின்புறத்தில் உள்ள ஏணியில் தொங்கியபடி பயணம் மேற்கொண்டனா். மேலும், பேருந்தின் ஓட்டுநா், மாணவா்களின் நிலையை கண்டுகொள்ளாமல் பேருந்தை அதிவேகமாக இயக்கி லாரியை முந்தி சென்ாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து தினமணி நாளிதழில் வியாழக்கிழமை செய்தி வெளியானது. இதைத்தொடா்ந்து, அன்றைய தினமே நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் உத்தரவின் பேரில், வட்டாரப் போக்குவரத்து அலுவலா் கே. பழனிச்சாமி, மோட்டாா் வாகன ஆய்வாளா் க. பிரபு ஆகியோா் சம்பந்தப்பட்ட தனியாா் பேருந்தை பறிமுதல் செய்து, வட்டாரப் போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டுவந்தனா்.

ADVERTISEMENT

மேலும், பேருந்தில் அதிக பயணிகளை ஏற்றிய குற்றத்திற்காக 15 நாள்களுக்கு வாகன உரிமம் ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தனா்.

 

ADVERTISEMENT
ADVERTISEMENT