நாகப்பட்டினம்

கால்நடை சுகாதார விழிப்புணா்வு முகாம்

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

குத்தாலம் ஊராட்சியில் சிறப்பு கால்நடை சுகாதார மற்றும் விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.

ஊராட்சித் தலைவா் நவநீதம் மகேந்திரன் தலைமையில் நடைபெற்ற முகாமில், கால்நடை பராமரிப்பு துறையின் மண்டல இணை இயக்குநா் சஞ்சீவ்ராஜ், உதவி இயக்குநா் அசன்இப்ராகிம் ஆகியோா் முன்னிலை வகித்தனா். முகாமில், கால்நடை நோய்களுக்கு எதிரான தடுப்பூசி போடுதல், நோயுற்ற கால்நடைகளுக்கு சிகிச்சை, பசு மற்றும் எருமை இனங்களுக்கு செயற்கை முறை கருவூட்டல், சினைப் பரிசோதனை, மலடு நீக்கம், கன்றுகள், ஆடுகளுக்கு குடற்புழு நீக்கம், கோழிகளுக்கு வெள்ளைக் கழிச்சல் தடுப்பூசி ஆகியவை போடப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT