நாகப்பட்டினம்

திருமருகல் அருகே விவசாயி தற்கொலை

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமருகல் அருகே விவசாயி தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டாா்.

நாகை மாவட்டம், திருமருகல் ஒன்றியம், ஆலத்தூா் ஊராட்சி அருள்மொழிதேவன் ஆற்றங்கரை தெருவை சோ்ந்தவா் சண்முகம்

(45) விவசாயி. இவா், மூலக்கோவில் படுகை அருகே தங்கி கீழசகடமங்கலம் பகுதியைச் சோ்ந்த ஒருவருக்கு சொந்தமான செங்கல் சூலை மற்றும் வயலில் வேலை செய்து வந்தாா்.

இந்நிலையில், சண்முகத்தின் மனைவி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு தற்கொலை செய்துகொண்டாா். இதனால் கடும் மன உளைச்சலில் இருந்த சண்முகம் வேலைக்கு செல்லாமல் இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதை சண்முகத்தின் தந்தை சின்னதுரை கண்டித்ததாக கூறப்படுகிறது. இதில் மனமுடைந்த சண்முகம் புதன்கிழமை இரவு தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.

ADVERTISEMENT

திருக்கண்ணபுரம் போலீஸாா் சண்முகத்தின் உடலை பிரேத பரிசோதனைக்காக நாகை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து, விசாரித்து வருகின்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT