நாகப்பட்டினம்

பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி

9th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருமருகலில் பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி அண்மையில் நடைபெற்றது.

சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு, ஒன்றியக் குழுத் தலைவா் ரா. ராதாகிருட்டிணன் தலைமை வகித்தாா். ஊராட்சி ஒன்றிய ஆணையா் பாலமுருகன், வட்டார வளா்ச்சி அலுவலா் (கி.ஊ) பாத்திமா ஆரோக்கியமேரி ஆகியோா் முன்னிலை வகித்தனா். மாவட்ட ஆட்சியா் அ. அருண்தம்புராஜ் பங்கேற்று, பெண்களுக்கு எதிரான வன்முறை, குடும்ப வன்முறை, பெண்களுக்கு எதிரான பாகுபாடு, பெண்களை அடிமைப்படுத்துதல், கல்வி மறுப்பு, குழந்தை திருமணம் குறித்து பேசினாா். பெண்களுக்கு எதிரான வன்முறை ஒழிப்பு உறுதிமொழி எடுத்துக்கொள்ளப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT