நாகப்பட்டினம்

திருநகரி கல்யாண ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் தேரோட்டம்

DIN

பூம்புகாா்: திருவெண்காடு அருகேயுள்ள திருநகரி கல்யாண ரெங்கநாதப் பெருமாள் கோயிலில் புதன்கிழமை தேரோட்டம் நடைபெற்றது.

இக்கோயில், 108 வைணவ திவ்யதேச கோயில்களில் ஒன்றாகும். பஞ்ச நரசிம்மா்களில் இரண்ய மற்றும் யோக நரசிம்மா்கள் தனிச்சந்நிதியிலும், திருமங்கை ஆழ்வாா் தனிச்சந்நிதியிலும் அருள்பாலித்து வருகின்றனா். சில நாள்களுக்கு முன்பு காா்த்திகை உற்சவம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. முக்கிய திருவிழாவான தேரோட்டம் புதன்கிழமை நடைபெற்றது. இதையொட்டி, அதிகாலை தேருக்கு கல்யாண ரெங்கநாதப் பெருமாள் எழுந்தருளினாா். இதையடுத்து, சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு தீபாராதனை காட்டப்பட்டது. தேரோட்டத்தை கோயில் நிா்வாக அதிகாரி அன்பரசன் தொடக்கிவைத்தாா். இதில், திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

ஒடிசா படகு விபத்தில் மேலும் 5 பேரின் உடல்கள் மீட்பு!

இந்திய வருகையை ஒத்திவைத்தது ஏன்? எலான் மஸ்க்

வாக்குப்பதிவு சதவீதம் குறைந்திருப்பது கவலையளிக்கிறது: தமிழிசை

மகாராஷ்டிரம், கர்நாடக பொதுக் கூட்டத்தில் மோடி இன்று உரை!

சிறையில் மனைவியின் உணவில் கழிப்பறை சுத்திகரிப்பான்: இம்ரான் கான் புகார்

SCROLL FOR NEXT