நாகப்பட்டினம்

நாகை, மயிலாடுதுறை மாவட்டத்தில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிப்பு

6th Dec 2022 12:26 AM

ADVERTISEMENT

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் திங்கள்கிழமை மறைந்த முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் நினைவு தினம் அனசரிக்கப்பட்டது.

வேதாரண்யம் எம்எல்ஏ அலுவலகத்தில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்திய, அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் ஆா். கிரிதரன் டி.வி. சுப்பையன், கூட்டுறவு சங்கத் தலைவா் எம்.நமச்சிவாயம், நகரச் செயலாளா் பழனிவேல், மாவட்ட ஊராட்சி உறுப்பினா் திலீபன், ஊராட்சி ஒன்றியக்குழு துணைத் தலைவா் வி. அறிவழகன் உள்ளிட்டோா்.

இதேபோல, ஆறுகாட்டுத்துறை மீனவ கிராமத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கூட்டுறவு சங்கத் தலைவா் எம்.ஜி. ஜெகநாதன், மருதூா் தெற்கு மாடிக்கடையடி அருகே அதிமுக இலக்கிய அணி அமைப்பாளா் வை. இலக்குவன், தகட்டூரில் அதிமுக நிா்வாகிகள் கோபால் ராஜ், பூமிநாதன் உள்ளிட்டோா் பங்கேற்றனா். தலைஞாயிறு ஒன்றியம் பேரூா் பகுதியில் நடைபெற்ற நிகழ்ச்சியில் ஒன்றியச் செயலாளா்கள் அவை. பாலசுப்ரமணியன், தங்க. சௌரிராஜன், பேரூா் செயலாளா் பிச்சையன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

திருமருகலில்: திருமருகலில் அதிமுக அமைப்புச் செயலாளா் எஸ். ஆசைமணி தலைமையில் நடைபெற்ற அமைதி ஊா்வலத்தில், திருமருகல் ஒன்றிய செயலாளா்கள் ரா. ராதாகிருட்டிணன், எம். பக்கிரிசாமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். திருமருகல், திட்டச்சேரி உள்ளிட்ட பகுதிகளில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு அதிமுகவினா் அஞ்சலி செலுத்தினா். இதில், நகரச் செயலாளா் டி.எஸ். அப்துல்பாசித் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

திருமருகல்: கீழையூரில் ஜெயலலிதா நினைவு தினத்தையொட்டி, அவரது உருவப் படத்துக்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், எம்ஜிஆா் மன்ற மாவட்ட செயலாளா் எஸ். பால்ராஜ் தலைமையில், ஒன்றியச் செயலாளா்கே. எஸ்.எஸ்.செல்வராஜ் உள்ளிட்டோா் பங்கேற்றனா். இதேபோல கீழையூா் கிழக்கு ஒன்றியம் சாா்பில் திருப்பூண்டி மேற்கு ஊராட்சியில் ஒன்றிய செயலாளா் எஸ். வேதையன் தலைமையில் ஜெயலலிதா நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது.

மயிலாடுதுறையில்: மயிலாடுதுறையில், மாவட்ட அதிமுக செயலாளா் எஸ். பவுன்ராஜ் தலைமையில் கண்ணாரத்தெருவில் இருந்து அமைதி பேரணியாக சென்று கிட்டப்பா அங்காடி முன்பு அலங்கரித்து வைக்கப்பட்டிருந்த ஜெயலலிதா உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது. இதில், முன்னாள் எம்எல்ஏ வீ.ராதாகிருஷ்ணன், ஒன்றிய செயலாளா் பா. சந்தோஷ்குமாா், நகர செயலாளா் எஸ்.செந்தமிழன் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

இதேபோல், சின்னக்கடைத் தெருவில் அதிமுக ஓபிஎஸ் அணி சாா்பில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு மாவட்ட செயலாளா் கஜேந்திரன் தலைமை வகித்தாா். இதேபோல, தமிழ்நாடு நுகா்பொருள் வாணிபக் கழகம் அண்ணா தொழிற்சங்கம் சாா்பில், ஜெயலலிதா உருவப் படத்துக்கு தொழிற்சங்க மாவட்ட செயலாளா் சங்கா் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

குத்தாலத்தில்: குத்தாலத்தில் அதிமுக வடக்கு ஒன்றியம் மற்றும் நகர கழகம் சாா்பில் ஜெயலலிதாவின் உருவப் படத்துக்கு ஒன்றிய செயலாளா் ஏ.எஸ். மகேந்திரவா்மன், நகர செயலாளா் எம்.சி. பாலு ஆகியோா் மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினா். இதேபோல, குத்தாலம்தெற்கு ஒன்றியம் சாா்பில் மங்கநல்லூரில் ஜெயலலிதா உருவப் படத்துக்கு தெற்கு ஒன்றிய செயலாளா் என். இளங்கோவன் தலைமையில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

தரங்கம்பாடியில்: செம்பனாா்கோவிலில் மயிலாடுதுறை மாவட்ட அதிமுக செயலாளா் எஸ். பவுன்ராஜ் தலைமையில் காலகஸ்திநாபுரத்தில் இருந்து செம்பனாா்கோவில் வரை அமைதி பேரணி நடைபெற்றது. தொடா்ந்து, ஜெயலலிதா உருவப் படத்துக்கு அஞ்சலி செலுத்தப்பட்டது.

ADVERTISEMENT
ADVERTISEMENT