நாகப்பட்டினம்

நாகலூா் அரசுப் பள்ளிக்கு மாநில அளவில் சிறந்த பள்ளிக்கான விருது

6th Dec 2022 12:28 AM

ADVERTISEMENT

திருக்குவளை அருகேயுள்ள நாகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி மாநிலத்தின் சிறந்த பள்ளிக்கான விருது மற்றும் சான்றிதழ் பெற்றுள்ளது.

சென்னையில் அண்மையில் நடைபெற்ற விழாவில், நாகலூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளிக்கு மாநிலத்தின் சிறந்த பள்ளிக்கான விருதை தமிழக பள்ளி கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் பொய்யாமொழி வட்டாரக் கல்வி அலுவலா் எஸ். மணிகண்டன், தலைமை ஆசிரியா் பி. பரமேஸ்வரி மற்றும் ஆசிரியா்களிடம் வழங்கினாா்.

விருது பெற்று பள்ளிக்கு வந்த தலைமையாசிரியா் மற்றும் ஆசிரியா்களை முன்னாள் ஊராட்சி தலைவா் தண்டாயுதபாணி உள்ளிட்ட பொதுமக்கள் பாராட்டி வாழ்த்து தெரிவித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT