நாகப்பட்டினம்

அடிப்படை வசதிகள் செய்து தரக் கோரி சிபிஎம் ஆா்ப்பாட்டம்

6th Dec 2022 12:27 AM

ADVERTISEMENT

கீழையூா் ஒன்றியத்தில் அடிப்படை வசதிகள் செய்துதரக் கோரி மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி சாா்பில் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டம் நடைபெற்றது.

கீழையூா் ஊராட்சி அலுவலகம் முன் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்திற்கு கிளை செயலாளா் என். நடேச ஜெயராமன் தலைமை வகித்தாா். கிளைச் செயலாளா் எஸ். சுலைமான் சேட் முன்னிலை வகித்தாா். ஒன்றிய செயலாளா் டி. வெங்கட்ராமன் பேசினாா்.

ஆா்ப்பாட்டத்தில், கீழையூா் ஊராட்சியில் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் அமைக்க வேண்டும், கீழையூா் ஊராட்சிக்கு உட்பட்ட பகுதியில் சீரமைக்கப்படாமல் உள்ள பல்வேறு சாலைகளை சீரமைக்க வேண்டும், மயான சாலை அமைத்து தரவேண்டும், மின்விளக்கு, குடிநீா் உள்ளிட்ட பொதுமக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை நிறைவேற்றி தர வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகள் வலிறுத்தப்பட்டன.

இதேபோல மேலவாழக்கரை ஊராட்சிஅலுவலகம் முன் சிபிஎம் ஒன்றிய குழு உறுப்பினா் ஐயப்பன் தலைமையில் ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, கருங்கண்ணி, சோழவித்தியாபுரம், தண்ணிலப்பாடி, வெண்மணச்சேரி, திருவாய்மூா், மீனம்பநல்லூா், பெரியத்தும்பூா், பாலக்குறிச்சி ஆகிய 10 ஊராட்சி அலுவலகம் முன் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT