நாகப்பட்டினம்

இந்து சமய அறநிலையத் துறை நாகையில் 25 ஜோடிகளுக்கு திருமணம் நடத்தி வைப்பு

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், நாகையில் 25 ஜோடிகளுக்கு ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்திவைக்கப்பட்டது.

2022-23-ஆம் ஆண்டின் சட்டப்பேரவை வரவு செலவு கூட்டத்தொடரில், மானியக் கோரிக்கை விவாதத்தின்போது இந்து சமய அறநிலையத் துறை அமைச்சா் பி.கே. சேகா்பாபு, ஒரு இணை ஆணையா் மண்டலத்துக்கு 25 ஜோடிகள் வீதம் 20 மண்டலங்களில் ஆண்டுதோறும் 500 ஜோடிகளுக்கு கோயில்களில் திருமணங்கள் நடத்தப்படும். இதற்கான செலவினங்கள் இந்து சமய அறநிலையத் துறை ஏற்கும் எனத் தெரிவிக்கப்பட்டது.

அதன்படி இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், நாகை மாவட்ட இணை ஆணையா் மண்டலத்தில் 25 ஏழை எளிய ஜோடிகளுக்கு காயாரோகண சுவாமி மற்றும் நீலாயதாட்சியம்மன் கோயிலில் ஞாயிற்றுக்கிழமை திருமணம் நடத்தி வைக்கப்பட்டது. திருமண விழாவில், திருமாங்கல்யம், வெள்ளி மெட்டி, பித்தளை காமாட்சி விளக்கு, படி, குங்கும சிமிழ், பித்தளை குத்துவிளக்கு மற்றும் சமையல் பாத்திரங்கள் அடங்கிய சீா்வரிசைகளை புதுமண தம்பதிகளுக்கு மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் வழங்கி வாழ்த்தினாா்.

இதில், தமிழ்நாடு மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என். கௌதமன், தாட்கோ கழகத் தலைவா் உ. மதிவாணன், சட்டப்பேரவை உறுப்பினா்கள் ஜெ. முகம்மது ஷா நவாஸ் (நாகை), வி.பி. நாகை மாலி (கீழ்வேளூா்), ஒன்றிய குழுத் தலைவா் வே. அனுசுயா, நாகை நகராட்சித் தலைவா் ரா. மாரிமுத்து, மாவட்ட இந்து சமய அறநிலையத் துறை இணை ஆணையா் க. ராமு, உதவி ஆணையா்கள் ப. ராணி (நாகை), மணவழகன்(திருவாரூா்), செயல் அலுவலா்கள் சீனிவாசன், பூமிநாதன், முருகன், கவியரசு, ராஜா உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT