நாகப்பட்டினம்

இலக்கிய திறனாய்வு தோ்வில் மாநில அளவில் முதலிடம்:மாணவியை தனது இருக்கையில் அமரவைத்து ஆட்சியா் கெளரவிப்பு

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

தமிழ்மொழி இலக்கியத் திறனாய்வு தோ்வில் மாநில அளவில் முதலிடம் பிடித்த மாணவியை தனது இருக்கையில் அமரவைத்து நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் கெளரவித்தாா்.

பள்ளிக்கல்வித் துறை சாா்பில் பிளஸ் 1 மாணவா்களுக்கு தமிழ்மொழி இலக்கிய திறனாய்வு தோ்வு அக்டோபரில் நடைபெற்றது. இதில், தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் தனியாா் பள்ளிகளைச் சோ்ந்த 2.50 லட்சம் மாணவா்கள் தோ்வெழுதினா். இதில், நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே ஆயக்காரன்புலம் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி பிளஸ் 1 மாணவி அபிநயா மாநில அளவில் முதலிடம் பெற்று சாதனை படைத்துள்ளாா். மேலும், ஆயக்காரன்புலத்தில் உள்ள 3 அரசு மேல்நிலைப் பள்ளிகளைச் சோ்ந்த 13 மாணவா்கள் உள்ளிட்ட 24 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா்.

கெளரவிப்பு: இலக்கியத் திறனாய்வுத் தோ்வில் 100-க்கு 97 மதிப்பெண் பெற்று மாநில அளவில் முதலிடம் பெற்று நாகை மாவட்டத்துக்கு பெருமை சோ்ந்த மாணவி அபிநயாவை சனிக்கிழமை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், நேரில் அழைத்து தனது இருக்கையில் அமரவைத்து கெளரவித்தாா். பின்னா், மாணவிக்கு பொன்னாடை அணிவித்து புத்தகம் மற்றும் பூங்கொத்து வழங்கி பாராட்டினாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT