நாகப்பட்டினம்

நாகையில் இலவச மருத்துவ முகாம்

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்ட கத்தாா் ஜமாஅத் அமைப்பு சாா்பில், ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற சிறப்பு மருத்துவ முகாமை சட்டப்பேரவை உறுப்பினா் ஜெ. முகம்மது ஷா நவாஸ் தொடக்கிவைத்தாா்.

முகாமில், சா்க்கரை அளவு கண்டறிதல், ரத்த கொதிப்பு உள்ளிட்ட பொது மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகள் மேற்கொள்ளப்பட்டன. குறிப்பாக, பேச்சுத் திறன் குறைபாடு, பாத நரம்பியல் பரிசோதனைகள் செய்யப்பட்டன. இதில், நூற்றுக்கும் மேற்பட்டோா் பங்கேற்று பயனடைந்தனா். கத்தாா் ஜமாத் நாகை மாவட்ட தலைவரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட துணைச் செயலாளா் நாகை சாதிக், பொருளாளா் அப்துல் ரகுமான், செயலாளா் சையது யூசுப், துணைச் செயலாளா் கரீம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

 

 

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT