நாகப்பட்டினம்

வேளாங்கண்ணி அருகே கதண்டு கூடு அழிப்பு

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

வேளாங்கண்ணி அருகே பொதுமக்களை அச்சுறுத்திய கதண்டு கூட்டை தீயணைப்புத் துறையினா் ஞாயிற்றுக்கிழமை அழித்தனா்.

வேளாங்கண்ணி அருகே பிரதாபராமாபுரம் வடக்குத் தெருவில் உள்ள பனை மரத்தில் அதிகளவில் கதண்டுகள் இருந்துள்ளன. இந்நிலையில், அப்பகுதியில் வசிக்கும் பலா் கதண்டுகளால் தாக்கப்பட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனா். கதண்டுகளின் அச்சுறுத்தல் நாளுக்கு நாள் அதிகரித்ததால், அப்பகுதி மக்கள் நாகை  தீயணைப்புத் துறைக்கு தகவல் தெரிவித்தனா்.

இதைத்தொடா்ந்து, மாவட்ட அலுவலா் சரவணபாபு உத்தரவின் பேரில், வேளாங்கண்ணி தீயணைப்பு நிலைய சிறப்பு அலுவலா் பக்கிரிசாமி தலைமையில் வீரா்கள் அங்கு சென்று கதண்டு கூட்டை ஞாயிற்றுக்கிழமை அழித்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT