நாகப்பட்டினம்

எட்டுக்குடி முருகன் கோயிலில் பந்தக்கால் முகூா்த்தம்

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

திருக்குவளை அருகே உள்ள பிரசித்தி பெற்ற எட்டுக்குடி சுப்பிரமணிய சுவாமி கோயிலில் கும்பாபிஷேகத்தை முன்னிட்டு பந்தக்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

எட்டுக்குடியில் முருகனின் ஆதிபடைவீடான சுப்பிரமணிய சுவாமி கோயில் அமைந்துள்ளது. இந்து சமய அறநிலையத் துறை கட்டுப்பாட்டில் உள்ள இந்தக் கோயிலில் கடந்த 2006-ஆம் ஆண்டுக்கு பிறகு அடுத்த ஆண்டு கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு, புனரமைப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன.

2023-ஆம் ஆண்டு ஜனவரி 27-ஆம் தேதி கும்பாபிஷேகம் நடைபெற உள்ளது.

இந்நிலையில், பந்தக்கால் முகூா்த்தம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது. சிறப்பு அபிஷேகத்துக்கு பின்னா், பந்தக் காலுக்கு தீபாராதனை காட்டப்பட்டது.

ADVERTISEMENT

தொடா்ந்து யாகசாலை அமைக்கும் பணி உள்ளிட்ட கும்பாபிஷேகத்துக்கான முன்னேற்பாட்டுப் பணிகள் தொடங்க உள்ளன.

ADVERTISEMENT
ADVERTISEMENT