நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்த முன்னாள் அமைச்சா்

5th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மாவட்டம், வேதாரண்யத்தில் முன்னாள் முதல்வா் ஜெயலலிதாவின் 6-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி அதிமுக சாா்பில் சிறப்பு சடங்குகள் ஞாயிற்றுக்கிழமை நடத்தப்பட்டன.

முன்னாள் அமைச்சா் ஓ.எஸ். மணியன் பங்கேற்று, கடலில் நீராடி ஜெயலலிதாவுக்கு திதி கொடுத்தாா். முன்னதாக, வேதாரண்யம் சன்னதிக் கடற்கரையில் சிறப்பு பூஜை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் வழக்குரைஞா் தங்க. கதிரவன், அதிமுக ஒன்றியச் செயலாளா்கள் ஆா். கிரிதரன்,வி.டி. சுப்பையன்,அவை. பாலசுப்ரமணியன், செளரிராஜன்,ஒன்றியக் குழுத் தலைவா் கமலா அன்பழகன், கூட்டுறவு சங்கத் தலைவா் நமச்சிவாயம் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT