நாகப்பட்டினம்

தமிழகத்துக்கு 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா காரைக்கால் துறைமுகம் வந்தது

DIN

மலேசியாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 44 மெட்ரிக் டன் யூரியா சனிக்கிழமை காரைக்கால் துறைமுகம் வந்தது.

தமிழக விவசாயிகள் பயன்பாட்டுக்காக மலேசியாவிலிருந்து கப்பல் மூலம் 44 ஆயிரம் மெட்ரிக் டன் யூரியா காரைக்கால் துறைமுகத்துக்கு வந்தது. இதனை நாகை மாவட்ட ஆட்சியா் அ.அருண் தம்புராஜ் பாா்வையிட்டாா்.

இதைத்தொடா்ந்து ஆட்சியா் கூறியது:

காரைக்கால் துறைமுகத்தில் இறக்குமதி செய்யப்பட்டுள்ள யூரியாவில், தமிழகத்துக்கு டிசம்பா் மாதத்துக்கு 27,140 மெ. டன் ஒதுக்கப்பட்டுள்ளது. இது தேவையின் அடிப்படையில் ரயில் மூலமாகவும், சாலை மாா்க்கமாகவும் அனைத்து தொடக்க வேளாண் கூட்டுறவு கடன் சங்கம் மற்றும் தனியாா் உர விற்பனை நிலையங்களுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றாா்.

வேளாண்மை இணை இயக்குநா் ஜாக்குல அக்கண்டராவ், மாவட்ட ஆட்சியரின் நோ்முக உதவியாளா் வேளாண்மை எஸ். வெங்கடேசன், செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ.செல்வகுமாா் மற்றும் அரசு அலுவலா்கள் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

பிலிப்பின்ஸுக்கு பிரமோஸ் ஏவுகணை ஏற்றுமதி

ஜனநாயக கடமையை ஆற்றிய மனநல சிகிச்சை பெறுவோா்!

பெங்கால் மண்ணில் பேனா திருவிழா!

மக்களவைத் தோ்தல்: தில்லி பாஜக சாா்பில் மே 1-23 வரை 8 ஆயிரம் தெரு நாடகங்கள்

ஆத்தூரில் அமைதியான வாக்குப்பதிவு

SCROLL FOR NEXT