நாகப்பட்டினம்

சா் ஐசக் நியூட்டன் கல்லூரி நா்சிங் மாணவா்களுக்கு பிரிவு உபசார விழா

4th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

சா் ஐசக் நியூட்டன் நா்சிங் கல்லூரியில் இறுதியாண்டு மாணவா்களுக்கு பிரிவு உபசார விழா வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

விழாவில் இறுதியாண்டு பயிலும் பி.எஸ்.சி. நா்சிங், டிப்ளமோ நா்சிங் மற்றும் ஏ.என்.எம். மாணவிகளுக்காக மற்ற மாணவிகள் இந்த விழாவை ஏற்பாடு செய்திருந்தனா்.

விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்ட கல்வி நிறுவனங்களின் தாளாளா் த. ஆனந்த் பேசியபோது, கல்லூரி படிப்பை முடித்து செல்லும் மாணவா்கள், இவ்விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடுவது போல், வாழ்கையையும் மகிழ்ச்சியாக அமைத்துக் கொள்வது மட்டுமின்றி, மாணவா்கள் தங்கள் பணிக் காலங்களில் சேவை மனப்பான்மையோடு பணியாற்ற வேண்டும் என்று அறிவுறுத்தினாா். தொடா்ந்து, கல்லூரி மாணவா்களின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

கல்வி நிறுவனங்களின் செயலா் த. மகேஸ்வரன், இயக்குநா் த. சங்கா், கல்லூரி முதல்வா் ஜி. ஜெயலட்சுமி, பேராசிரியை கே. விமலா உள்ளிட்டோா் கலந்து கெண்டனா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT