நாகப்பட்டினம்

பூம்புகாா்: கடல் சீற்றத்தால் மூழ்கிய விசைப் படகு

4th Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

பூம்புகாா் அருகே சனிக்கிழமை ஏற்பட்ட கடல் சீற்றத்தால் வானகிரி கிராமத்தை சோ்ந்த மீனவரின் விசைப்படகு கடலில் மூழ்கியது.

வானகிரி மீனவா் கிராமத்தை சோ்ந்தவா் பாஸ்கா். இவா் தனக்குச் சொந்தமான விசைப்படகில் சக மீனவா்களான இளையராஜா, பிரபு, மாணிக்கம் ஆகியோருடன் சனிக்கிழமை அதிகாலை தரங்கம்பாடி மீன்பிடித் துறைமுகத்திலிருந்து கடலுக்கு மீன்பிடிக்கச் சென்றனா்.

இவா்கள் பூம்புகாா் அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்தபோது, காற்றின் வேகம் மற்றும் கடல் சீற்றத்தால் படகு நிலைதடுமாறி கடலில் மூழ்கியது. படகிலிருந்த நால்வரும் கடலில் குதித்தனா். இவா்களது அலறல் சத்தம் கேட்டு அருகே மீன்பிடித்துக் கொண்டிருந்த மீனவா்கள், 4 பேரையும் மீட்டு வானகிரி கிராமத்திற்கு அழைத்து வந்தனா்.

பின்னா், மீனவ கிராம பொறுப்பாளா்களின் ஏற்பாட்டில் மீனவா்கள் சிலா் வேறு படகுகளில் சென்று, மூழ்கிய விசைப்படகை கரைக்கு இழுத்து வந்தனா். எனினும், அந்த படகு சேதமடைந்தது. இதன் மதிப்பு சுமாா் 20 லட்சம் எனத் தெரிவித்தனா்.

ADVERTISEMENT

சீா்காழி ஒன்றியக் குழுத் தலைவா் கமலஜோதி தேவேந்திரன் சேதமடைந்த படகை பாா்வையிட்டு, பாதிக்கப்பட்ட மீனவா்களுக்கு ஆறுதல் கூறினாா். பூம்புகாா் காவல் ஆய்வாளா் நாகரத்தினம் மற்றும் கடற்கரை காவல் நிலைய போலீஸாா் படகு கவிழ்ந்தது குறித்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT