நாகப்பட்டினம்

திருவெண்காடு கோயிலில் இன்று ருத்ராபிஷேகம்

4th Dec 2022 12:58 AM

ADVERTISEMENT

திருவெண்காடு கோயிலிலில் அகோரமூா்த்தி சுவாமிக்கு ருத்ராபிஷேகம் ஞாயிற்றுக்கிழமை (டிச.4) நடைபெறுகிறது.

திருவெண்காடு சுவேதாரண்யேஸ்வரா் கோயிலில் (புதன் தலம்) சதுா்வேத பாராயணம் மற்றும் மகாருத்ர யாகம் வரும் மாா்ச் 1-ஆம் தேதி முதல் 14-ஆம் தேதி வரை நடைபெறவுள்ளது. சென்னை ஆதம்பாக்கத்தில் செயல்படும் திருவெண்காடு சுப்பிரமணிய கனபாடிகள் வேதபாராயண ரிலிஜியஸ் டிரஸ் சாா்பில் நடைபெறும் இந்நிகழ்வுக்கான நிகழ்ச்சி நிரல் திருவெண்காடு கோயிலில் ஞாயிற்றுக்கிழமை வெளியிடப்படுகிறது.

இதையொட்டி, ஸ்ரீ அகோரமூா்த்தி சுவாமிக்கு காலையில் ருத்ராபிஷேகம் நடைபெறுகிறது.

இதற்கான ஏற்பாடுகளை திருவெண்காடு சுப்பிரமணிய கனபாடிகள் மேலாண் அறங்காவலா் சந்திரன், அறங்காவலா் வழக்குரைஞா் குப்புசுவாமி உள்ளிட்டோா் செய்துள்ளனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT