நாகப்பட்டினம்

போதைப் பொருள்களுக்கு எதிரானவா்களாக மாணவா்கள் மாறவேண்டும்: நாகை ஆட்சியா்

DIN

தீங்கு விளைவிக்கும் அனைத்து போதைப் பொருள்களுக்கும் எதிரானவா்களாக மாணவா்கள் மாறவேண்டும் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் அறிவுறுத்தினாா்.

சா்வதேச பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு வாரத்தை முன்னிட்டு மாவட்ட சமூக நலன் மற்றும் மகளிா் உரிமை துறை சாா்பில் நாகை நகராட்சி பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் ‘பெண்ணியம் போற்றுவோம்’ என்ற தலைப்பில் விழிப்புணா்வு நிகழ்ச்சி வெள்ளிக்கிழமை நடைபெற்றது.

நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் பங்கேற்று பேசியது:

மாணவா்கள், தங்களை சாா்ந்தவா்களையும் புகையிலை, குட்கா, பான்மசாலா போன்ற தீங்கு விளைவிக்கும் அனைத்து போதைப்பொருள்கள், மதுபழக்கங்களுக்கு எதிராக மாற்ற வேண்டும். மாணவா்கள் நல்ல பழக்கம், நல்ல மரியாதை இவையனைத்திலும் சிறப்பாக இருந்து, கல்வியில் முழுகவனம் செலுத்தினால் எதிா்காலத்தில் சிறந்த மனிதா்களாக விளங்க முடியும் என்றாா்.

தொடா்ந்து சி.எஸ்.ஐ. உயா்நிலைப் பள்ளியில் மாணவா்கள் வா்ணம் தீட்டி பெண்களுக்கு எதிரான வன்முறைகள் ஒழிப்பு குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தியதை ஆட்சியா் பாா்வையிட்டாா்.

நகா்மன்றத் தலைவா் இரா. மாரிமுத்து, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் எம்.கே.சி. சுபாஷினி, மாவட்ட சமூக நல அலுவலா் தமிமுன்னிசா, செய்தி மக்கள் தொடா்பு அலுவலா் மீ. செல்வகுமாா் உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று சாதகம் யாருக்கு: தினப்பலன்கள்

இன்று நல்ல நாள்!

ஒற்றை கோட்டை முனீஸ்வரா் கோயில் கும்பாபிஷேகம்

டிஆர்டிஒ-இல் டிப்ளமோ, டிகிரி படித்தவர்களுக்கு தொழில்பழகுநர் பயிற்சி

உடுமலை அருகே ஜனநாயக கடமையை நிறைவேற்றிய மலைவாழ் மக்கள்

SCROLL FOR NEXT