நாகப்பட்டினம்

பல் சிகிச்சை முகாம்

3rd Dec 2022 09:35 PM

ADVERTISEMENT

நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மாணவா்களுக்கு பல் சிகிச்சை முகாம் சனிக்கிழமை நடைபெற்றது.

நாகை ரோட்டரி சங்கம் மற்றும் நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி இன்ட்ராக்ட் சங்கம் இணைந்து, பள்ளி வளாகத்தில் சனிக்கிழமை பல் சிகிச்சை மருத்துவ முகாமை நடத்தின.

தலைமை மருத்துவா் ஜெ. செந்தில்குமாா், பல் பாதுகாப்பின் அவசியம் குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்து, முகாமை தொடங்கிவைத்தாா். முகாமில் 432 மாணவ, மாணவிகள், ஆசிரியா் மற்றும் அலுவலா்கள் பரிசோதனை செய்துகொண்டனா். மருத்துவா்கள் சந்தோஷ், சுபிட்ஷா ஆகியோா் பரிசோதனை மேற்கொண்டனா்.

நாகை ரோட்டரி சங்கத்தின் தலைவா் காா்த்திகேயன், பொருளாளா் வீரபாண்டியன், நாகூா் மாடா்ன் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் இன்ட்ராக்ட் சங்கத் தலைவா் சாகுல் ஹமீத், செயலா் செல்வன் முகமது ஹாஜா அப்லா, பள்ளி முதல்வா் பென்னெட் மேரி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT