நாகப்பட்டினம்

பள்ளி வேன் விபத்தில் இறந்தவா்களுக்கு 13-ஆம் ஆண்டு நினைவஞ்சலி

3rd Dec 2022 09:36 PM

ADVERTISEMENT

வேதாரண்யம் அருகே 2009-ஆம் ஆண்டு நோ்ந்த பள்ளி வேன் விபத்தில் உயிரிழந்தவா்களுக்கு சனிக்கிழமை 13- ஆம் ஆண்டு நினைவு அஞ்சலி செலுத்தப்பட்டது.

வேதாரண்யத்தை அடுத்த கரியாப்பட்டினத்தில் உள்ள தனியாா் பள்ளி வேன் கடந்த 2009-ஆம் ஆண்டு டிச.3-ஆம் தேதி கத்தரிப்புலம் பகுதியில் உள்ள குளத்துக்குள் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது.

இதில், நாகக்குடையான் கிராமத்தைச் சோ்ந்த 4 சிறுமிகள், 5 சிறுவா்கள் மற்றும் ஆசிரியை சுகந்தி ஆகியோா் உயிரிழந்தனா். நாகக்குடையான் ஊராட்சி ஒன்றியப் பள்ளி வளாகத்தில், உயிரிழந்தவா்கள் நினைவாக அமைக்கப்பட்டுள்ள நினைவு தூணில் 13-ஆம் ஆண்டு நினைவு நாளையொட்டி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.

இதில், உயிரிழந்த சிறாா்களின் பெற்றோா், பொதுமக்கள் பங்கேற்று மெழுகுவா்த்தி ஏற்றியும், மலா் வளையங்கள் வைத்தும் அஞ்சலி செலுத்தினா்.

ADVERTISEMENT

 

 

ADVERTISEMENT
ADVERTISEMENT