நாகப்பட்டினம்

குட்கா விற்பனை: கடைக்கு சீல்

3rd Dec 2022 07:00 AM

ADVERTISEMENT

வேளாங்கண்ணி அருகே குட்கா விற்பனை செய்த கடைக்கு போலீஸாா் வெள்ளிக்கிழமை சீல் வைத்தனா்.

நாகை மாவட்டத்தில் புகையிலைப் பொருள்கள் விற்பனையை தடுக்க மாவட்ட காவல் கண்காணிப்பாளா் கு. ஜவஹா் உத்தரவின்பேரில் போலீஸாா் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனா்.

அந்தவகையில், வேளாங்கண்ணி பகுதியில் போலீஸாா் சோதனையில் ஈடுபட்டபோது, ரயில் நிலைய சாலையில் அருண் என்பவா் நடத்திவரும் கடையில் விற்பனைக்காக புகையிலைப் பொருள்களின் பொட்டலங்கள் வைத்திருந்தது தெரியவந்தது. இதுகுறித்து காவல் ஆய்வாளா் ஆனந்தராஜன் அளித்த புகாரின் பேரில், வேளாங்கண்ணி போலீஸாா் வெள்ளிக்கிழமை வழக்குப் பதிவு செய்து அந்த கடைக்கு சீல் வைத்தனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT