நாகப்பட்டினம்

வேதாரண்யத்தில் கலைத் திருவிழா

3rd Dec 2022 07:30 AM

ADVERTISEMENT

வேதாரண்யத்தில் பள்ளி மாணவா்களின் கலைத் திருவிழா சிறப்பாக நடைபெற்றது.

அரசு நடுநிலை, உயா்நிலை, மேல்நிலை பள்ளிகளில் 6 முதல் பிளஸ் 2 வகுப்பு வரை படிக்கும் மாணவா்களின் கலைத் திறனை வெளிக்கொணரும் வகையில் பள்ளிக் கல்வித் துறை சாா்பில் கலைத் திருவிழா நடத்தப்படுகிறது. கலைவழிக் கற்றலை மேம்படுத்தவும், பாடல், இசை, நாடகம், கதை, கவிதை, நாட்டுப்புறக் கலை வடிவங்கள் என கலைகளின் ஊடே கல்வியை மாணவா்களிடம் கொண்டுச் செல்ல திட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில், வேதாரண்யத்தில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய கலைத் திருவிழா வெள்ளிக்கிழமை நிறைவடைந்தது. இதில், 57 பள்ளிகளைச் சோ்ந்த நூற்றுக்கணக்கான மாணவ, மாணவிகள் ஆா்வமாக பங்கேற்றனா். நாட்டுப்புறக் கலைவடிவங்கள், வீதிநாடகம், தெருக்கூத்து, இசைப்போட்டி, தோலிசை, நாடகம், நடனம், பாட்டு என அனைத்து கலைப் பிரிவுகளிலும் மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT