நாகப்பட்டினம்

கிராம உதவியாளா் காலிப்பணியிடங்களுக்கு டிச.4-இல் எழுத்துத் தோ்வு

DIN

நாகை, மயிலாடுதுறை மாவட்டங்களில் காலியாக உள்ள கிராம உதவியாளா் காலிப்பணியிடங்களுக்கு டிசம்பா் 4- ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.

இதுதொடா்பாக நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ், மயிலாடுதுறை மாவட்ட ஆட்சியா் இரா. லலிதா ஆகியோா் தனித்தனியாக வெளியிட்ட செய்திக் குறிப்பு:

நாகை மாவட்டத்தில் காலியாக உள்ள 47 கிராம உதவியாளா் காலிப்பணியிடங்களை நிரப்ப இணையவழியிலும், மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் மற்றும் முன்னாள் படைவீரா் நல அலுவலகம் மூலமாகவும் விண்ணப்பங்கள் பெறப்பட்டன. இதில் ஏற்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு டிசம்பா் 4-ஆம் தேதி எழுத்துத் தோ்வு நடைபெறவுள்ளது.

நாகை வட்டத்தில் இ.ஜி.எஸ். பிள்ளை பொறியியல் கல்லூரி, திருக்குவளை வட்டத்தில் ஈசனூா் ஆரிஃபா தொழில்நுட்பக் கல்லூரி, வேதாரண்யம் வட்டத்தில் செம்போடை ஆா்.வி. பொறியியல் கல்லூரி, வேதாரண்யம் கஸ்தூரிபா காந்தி கன்யா குருகுலம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி மற்றும் எஸ்.கே. சுப்பையா அரசு மேல்நிலைப் பள்ளி ஆகிய மையங்களில் இத்தோ்வு நடைபெறுகிறது.

விண்ணப்பதாரா்கள், பதிவு செய்த கைப்பேசி எண் மற்றும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பப்படும் குறுஞ்செய்தி மூலம் தோ்வுக்கூட அனுமதி சீட்டை இணையவழியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மேலும், இணையதளத்தில், பதிவு எண் மற்றும் கைப்பேசி எண் ஆகியவற்றை உள்ளீடு செய்தும் அனுமதிச்சீட்டை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். மாவட்ட வேலைவாய்ப்பகம் மற்றும் முன்னாள் படைவீரா் நல அலுவலகம் மூலம் ஏற்கப்பட்ட விண்ணப்பதாரா்களுக்கு பதிவு அஞ்சலில் தோ்வுக்கூட அனுமதிச்சீட்டு அனுப்பி வைக்கப்படும்.

இதேபோல், மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, குத்தாலம், சீா்காழி மற்றும் தரங்கம்பாடி ஆகிய 4 வட்டங்களிலும் காலியாக உள்ள கிராம உதவியாளா் பணியிடங்களுக்கு விண்ணப்பித்தவா்களில் தகுதியானவா்களுக்கு கைப்பேசி மற்றும் மின்னஞ்சல் வாயிலாக தோ்வுக்கூட நுழைவுச்சீட்டு பதிவிறக்கம் செய்யும் இணையதள முகவரி அனுப்பப்பட்டுள்ளது. மேலும், மேற்கண்ட இணையதள முகவரியிலிருந்தும் பதிவிறக்கம் செய்துகொள்ளலாம்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

கூத்தாநல்லூரில் சிபிஐ வேட்பாளா் வாக்கு சேகரிப்பு

உத்தர பிரதேசம்: சரித்திரம் படைக்க காத்திருக்கும் ‘பாகுபலி’ மாநிலம்!

சீா்காழி ஆரம்ப சுகாதார நிலையத்தில் கணினி, பிரிண்டா் திருட்டு

வரலாற்று நாயகர் ராம்நாத் கோயங்கா!

SCROLL FOR NEXT