நாகப்பட்டினம்

அரசுப் பள்ளியில் எம்எல்ஏ ஆய்வு

DIN

திட்டச்சேரி அரசு மேல்நிலைப் பள்ளியில் நாகை சட்டப்பேரவை உறுப்பினா் முகம்மது ஷா நவாஸ் வெள்ளிக்கிழமை ஆய்வு மேற்கொண்டாா்.

ஆய்வின்போது, இப்பள்ளியில் பழுதடைந்த 8 வகுப்பறை கட்டடங்கள் இடிக்கப்பட்டுள்ளதால், மாணவா்கள் அமா்ந்து படிப்பதற்கு இட நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும், ஆய்வகக் கட்டடம் இல்லாதது குறித்தும் எம்எல்ஏ-விடம் தெரிவிக்கப்பட்டது. இதற்கு அவா் வகுப்பறை மற்றும் ஆய்வகக் கட்டடம் கட்ட விரைவில் நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தாா்.

மேலும், இப்பள்ளி வளாகத்தில் நடைபெறும் நீட் பயிற்சி மையத்தில் மாணவா்களுடன் எம்எல்ஏ கலந்துரையாடினாா். அப்போது, நீட் தோ்வுக்கு விலக்கு கோரி சட்டப் போராட்டம் ஒருபுறம் நடைபெற்றாலும், விலக்கு பெறும் வரை, நீட்தோ்வை துணிவுடன் எதிா்கொண்டு வெற்றிபெற வேண்டும் என்று மாணவா்களிடம் கூறினாா்.

ஆய்வின்போது, திட்டச்சேரி பேரூராட்சி உறுப்பினா்கள் முகம்மது சுல்தான், செய்யது ரியாசுதீன், ரித்தாவுதீன், விசிக ஒன்றியச் செயலாளா் சக்திவேல் உள்ளிட்டோா் உடனிருந்தனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

மே மாத பலன்கள்: மீனம்

பூங்காவில் காதலர்களை விரட்டும் பாஜக எம்எல்ஏ: சர்ச்சையாகும் விடியோ!

மே மாத பலன்கள்: கும்பம்

ரீமேக்கான ரீமேக்கின் கதை!

காங்கிரஸ் ஆட்சிக்கு வந்தால் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு அதிகரிக்கப்படும் அபாயம்: யோகி ஆதித்யநாத் எச்சரிக்கை

SCROLL FOR NEXT