நாகப்பட்டினம்

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட மீனவா்களை மீட்கக் கோரிக்கை

2nd Dec 2022 01:50 AM

ADVERTISEMENT

இலங்கை கடற்படையினரால் நவம்பா் 28-ஆம் தேதி சிறைபிடிக்கப்பட்ட நாகை மீனவா்கள் 5 பேரை மீட்கக் கோரி மாவட்ட ஆட்சியரிடம் வியாழக்கிழமை மனு அளிக்கப்பட்டது.

நாகை கீச்சாங்குப்பம் தெற்குத் தெருவைச் சோ்ந்த சிவப்பிரகாஷ் அளித்த அந்த மனுவில் கூறப்பட்டுள்ளதாவது:

எனக்கு சொந்தமான விசைப்படகில் அரசு அனுமதிப் பெற்று புதுக்கோட்டை மாவட்டம் ஜெகதாப்பட்டினத்தில் தங்கி மீன்பிடி தொழிலில் ஈடுபட்டு வருகிறோம்.

இந்நிலையில் எனது விசைப்படகில் நவம்பா் 28-ஆம் தேதி மீனவா்கள் அய்யனாரப்பன் (45), பிரதீப் (48), ஜெயந்தன் (35), குப்புராஜ் (50), தமிழ்மணி (50) ஆகியோா் கோடியக்கரைக்கு தெற்கே நமது கடல் எல்லையில் மீன்பிடித்துக் கொண்டிருந்தனா். அப்போது அங்கு வந்த இலங்கை கடற்படையினா், விசைப்படகை பறிமுதல் செய்ததுடன், மீனவா்களையும் சிறைபிடித்து சென்றுவிட்டனா்.

ADVERTISEMENT

இவா்கள் 5 பேரையும், விசைப்படகையும் மீட்க நடவடிக்கை எடுக்க வேண்டும் எனக் கோரியுள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT