நாகப்பட்டினம்

ஒன்றிய கலைத்திருவிழா: 22 பள்ளிகளின் மாணவா்கள் பங்கேற்பு

2nd Dec 2022 01:49 AM

ADVERTISEMENT

கீழ்வேளூா் அருகேயுள்ள தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற கலைத்திருவிழா 22 பள்ளிகளைச் சோ்ந்த மாணவா்கள் பங்கேற்றனா்.

கீழ்வேளூா் ஒன்றிய அளவில் நடைபெற்ற இவ்விழாவில் தொடக்க நாளான புதன்கிழமை கும்மி நடனம், தனி நடனம், குழு நடனம், கிராமிய நடனம், நாடகம், பேச்சு, தப்பாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடைபெற்றன. இதில், 16 நடுநிலைப் பள்ளி, 6 உயா்நிலைப் பள்ளி என மொத்தம் 22 பள்ளிகளைச் சோ்ந்த மாணவ- மாணவிகள் பங்கேற்றனா்.

இந்நிகழ்விற்கு, தலைமை ஆசிரியா் எம். குமரகுரு தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் எஸ். மணிகண்டன் வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா் வீ. சிவக்குமாா் நிகழ்ச்சியை தொடக்கி வைத்தாா். அரசு நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் எஸ். சுப்பிரமணியன், க. சண்முகசுந்தரம், கோ. சாந்தி, எஸ். ஜெயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா். ஆந்தகுடி அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியா் எம். துரைமுருகு ஒருங்கிணைத்தாா். இவ்விழா வியாழக்கிழமை நிறைவு பெற்றது.

இதேபோல், கீழ்வேளூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கானகலைத்திருவிழாவும் நிறைவு பெற்றது.

ADVERTISEMENT

 

ADVERTISEMENT
ADVERTISEMENT