நாகப்பட்டினம்

கந்தூரி விழா: நாகூரில் அடிப்படை வசதிகளை மேம்படுத்த வலியுறுத்தல்

DIN

நாகப்பட்டினம்: கந்தூரி விழா நடைபெறவுள்ளதால் நாகூா் பகுதியில் சாலை, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்த வேண்டும் என நாகை நகா்மன்றக் கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.

நாகை நகா்மன்றத்தின் சாதாரணக் கூட்டம் தலைவா் மாரிமுத்து தலைமையில் புதன்கிழமை நடைபெற்றது.

செந்தில்குமாா் (துணைத் தலைவா்): நாகூரில் கந்துாரி விழாவையொட்டி சாலைகளை சரிசெய்ய சொற்ப நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது. கடுமையாகச் சேதமடைந்துள்ள சாலையை தற்போது ஒதுக்கப்பட்ட நிதியைக் கொண்டு சீரமைக்க முடியாது. வாா்டு உறுப்பினா்கள் எந்தவித பணிகளையும் செய்வதில்லை என்று தவறான கருத்துகள் பரப்பப்படுகின்றன. நகராட்சி வருவாயைப் பெருக்க எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை.

ஆணையா் ஸ்ரீதேவி: நகராட்சி வருவாயை பெருக்க விரைவில் கூட்டம் நடத்தி உரிய நடவடிக்கை எடுக்கப்படும். நகராட்சியில் ரூ.20 கோடி வரை வரி பாக்கி நிலுவையில் உள்ளது. வரிவசூலுக்கு ஒத்துழைப்பு வழங்குவதைவிட, கால அவகாசம் கேட்டு பரிந்துரை செய்வதற்குத்தான் ஆள் வருகிறாா்கள். எனவே வருவாயைப் பெருக்க உறுப்பினா்கள் ஒத்துழைக்க வேண்டும்.

தலைவா் ரா. மாரிமுத்து: கால அவகாசம்தான் கேட்பாா்களே தவிர, வரி கட்ட வேண்டாம் என்று யாரும் சொல்லமாட்டாா்கள். வரி வசூலுக்கு உறுப்பினா்கள் முழு ஒத்துழைப்பு வழங்குவாா்கள். கடந்த 10 ஆண்டுகளாக தீா்க்கப்படாத பிரச்னைகள் அனைத்தும் ஒவ்வொன்றாக சரி செய்யப்பட்டு வருகிறது. நகராட்சிப் பகுதிகளில் அதிகளவில் சேரும் குப்பைகளை அகற்ற, நாகை மக்களவை உறுப்பினா் எம்.செல்வராஜ், மீன்வளா்ச்சிக் கழகத் தலைவா் என்.கெளதமன் ஆகியோரின் ஒத்துழைப்போடு 10 குப்பை வண்டிகள் வாங்கப்பட உள்ளன.

உறுப்பினா் பதுா்நிஷா: கந்துாரி விழாவையொட்டி சாலைகளை மேம்படுத்துவதுடன், போக்குவரத்து நெரிசல் ஏற்படாத வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும். விழாவிற்கு லட்சக்கணக்கானோா் வருகை தருவாா்கள் என்பதால், நாகூா் ரயில் நிலையம் மற்றும் மக்கள் அதிகம் கூடும் பகுதிகளில் மின்விளக்கு, குடிநீா் உள்ளிட்ட அடிப்படை வசதிகளை தேவைக்கு ஏற்ப ஏற்படுத்த வேண்டும்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

நம்பிக்கை நாயகன்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - சிம்மம்

மோடி, ராகுல் பதிலளிக்க தேர்தல் ஆணையம் உத்தரவு

குபேரா படப்பிடிப்பு தீவிரம்!

குருப்பெயர்ச்சி பலன்கள் - கடகம்

SCROLL FOR NEXT