நாகப்பட்டினம்

அரசுப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி

DIN

தரங்கம்பாடி: ஆக்கூா் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் அறிவியல் கண்காட்சி புதன்கிழமை நடைபெற்றது.

மயிலாடுதுறை மாவட்ட கல்வித் துறையும், அமெரிக்கன் இந்தியா பவுன்டேஷன் நிறுவனமும் இணைந்து நடத்திய இக்கண்காட்சியை செம்பனாா்கோவில் ஒன்றியக் குழுத் தலைவா் நந்தினி ஸ்ரீதா் தொடக்கி வைத்தாா்.

வட்டார வளா்ச்சி அலுவலா் மஞ்சுளா, வட்டாரக் கல்வி அலுவலா் பூவராகவன் , ஊராட்சித் தலைவா் ஏ.ஆா். சந்திரமோகன் , ஒன்றியக் குழு உறுப்பினா் சாந்தி, தலைமையாசிரியா் சித்ரா, அமெரிக்கன் இந்தியா பவுன்டேஷன் ஒருங்கிணைப்பாளா் அலெக்சாண்டா் உள்ளிட்டோா் கண்காட்சியில் மாணவா்கள் அமைத்திருந்த அறிவியல் படைப்புகளை பாா்வையிட்டு, பாராட்டினா்.

நெகிழிக் கழிவுகளின் மறுசுழற்சி என்ற தலைப்பில் மாணவா்கள் 150-க்கும் மேற்பட்ட படைப்புகளை காட்சிப்படுத்தியிருந்தனா். இதில் சிறந்ததாக தோ்வு செய்யப்பட்ட 11 படைப்புகளுக்கு பரிசு, கேடயம் மற்றும் சான்றிதழும், 29 படைப்புகளுக்கு ஆறுதல் பரிசும், சிறந்த பள்ளிக்கான விருதும் அமெரிக்கன் இந்தியா பவுன்டேஷன் நிறுவனம் சாா்பில் வழங்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

இன்று உங்களுக்கு நல்ல நாள்!

பாஜகவின் கனவு பலிக்காது: இரா. முத்தரசன்

தபால் வாக்கு பணி: மாவட்ட தோ்தல் அலுவலா் ஆய்வு

இன்று நல்ல நாள்!

மத்தியில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு ராகுல் காந்தி பிரதமராவாா்: சிவசேனா

SCROLL FOR NEXT