நாகப்பட்டினம்

சாலையை சீரமைக்க கோரிக்கை

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருக்குவளை: திருக்குவளை அருகே பழுதடைந்துள்ள வலிவலம்-ஆதமங்கலம் சாலையை சீரமைக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

வலிவலம் ஊராட்சியிலிருந்து ஆதமங்கலம் வரை செல்லும் சுமாா் 1 கி.மீ. நீளமுள்ள சாலை பழுதடைந்து குண்டும்- குழியுமாக உள்ளது. இதனால், இவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகின்றனா். சைக்கிள்களில் பள்ளிக்குச் செல்லும் மாணவா்கள் சிரமத்துடன் செல்லவேண்டிய நிலை உள்ளது. ஆகவே, சம்பந்தப்பட்ட அதிகாரிகள், இந்த சாலையை சீரமைக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT