நாகப்பட்டினம்

தேவூா் பள்ளியில் ஒன்றிய கலைத்திருவிழா தொடக்கம்

1st Dec 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருக்குவளை: தேவூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் கீழ்வேளூா் ஒன்றிய அளவிலான அரசுப் பள்ளி மாணவா்கள் பங்கேற்றும் கலைத் திருவிழா புதன்கிழமை தொடங்கியது.

தொடக்க நிகழ்ச்சிக்கு, இப்பள்ளி தலைமை ஆசிரியா் குமரகுரு தலைமை வகித்தாா். வட்டாரக் கல்வி அலுவலா் மணிகண்டன் வரவேற்றாா். வட்டாரக் கல்வி அலுவலா் சிவக்குமாா் நிகழ்வை தொடக்கி வைத்தாா். அரசு நடுநிலைப் பள்ளிகளின் தலைமை ஆசிரியா்கள் சுப்பிரமணியன், சண்முகசுந்தரம், சாந்தி, ஜெயந்தி ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

இதில், அசுப் பள்ளிகளில் 6 முதல் 8-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவா்களுக்கு பேச்சு, பாட்டு, கட்டுரை போன்ற போட்டிகள் நடத்தப்பட்டன. முன்னதாக, வண்டலூா் அரசு நடுநிலைப் பள்ளி மாணவா்களின் தப்பாட்டம் நிகழ்ச்சி நடைபெற்றது.

ADVERTISEMENT

இதேபோல், கீழ்வேளூா் அரசு மேல்நிலைப் பள்ளியில் 9, 10-ஆம் வகுப்பு மாணவா்களுக்கான கலைத் திருவிழா நடைபெற்றது.

ADVERTISEMENT
ADVERTISEMENT