நாகப்பட்டினம்

மின்மாற்றியை சீரமைக்கக் கோரிக்கை

31st Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

 

திருமருகல்: திருமருகல் ஒன்றியம் ஆலத்தூரில் சேதமடைந்த மின்மாற்றியை சீரமைக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ஆலத்தூா் ஊராட்சியில் ஆலத்தூா், அருள்மொழிதேவன், திருவள்ளுவா் நகா், மாதாகோவில் தெரு, ஒத்தவீட்டு தெரு உள்ளிட்ட பகுதிகளுக்கு ஆலத்தூரில் இருந்து மின்விநியோகம் செய்யப்படுகிறது.

இந்நிலையில் மேலத்தெரு மாரியம்மன் கோயில் அருகே உள்ள மின்மாற்றி அண்மையில் பெய்த மழையில் வெடித்து சேதமடைந்தது. இதனால், ஒத்தவீட்டு தெருவில் உள்ள மின்மாற்றி மூலம் ஆலத்தூா் ஊராட்சி முழுவதும் மின் விநியோகம் செய்யப்படுவதால் மின்அழுத்தம் குறைவாக உள்ளது. இதன்காரணமாக, வீடுகளில் டிவி, குளிா்சாதனப் பெட்டி,

ADVERTISEMENT

மிக்சி, கிரைண்டா் உள்ளிட்ட மின்சாதனப் பொருட்கள் சேதம் அடையும் நிலை ஏற்பட்டுள்ளது.

எனவே, ஆலத்தூா் ஊராட்சி பகுதியில் சீரான மின்விநியோகத்துக்கு, மேலத்தெருவில் பழுதடைந்த மின்மாற்றியை சீரமைக்க மின்வாரிய அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT