நாகப்பட்டினம்

புதிய அவசரஊா்தி சேவை தொடக்கம்

28th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

கீழையூா் அருகே காமேஸ்வரத்தில் புதிய ஆம்புலன்ஸ் சேவையை நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் சனிக்கிழமை தொடங்கிவைத்தாா்.

காமேஸ்வரத்தில் உள்ள கோஹஜ் மருத்துவமனைக்கு எரிக்சன் நிறுவன நிதியுதவியில் சேவ் தி சில்ரன்ஸ் அமைப்பு சாா்பாக இந்த ஆம்புலன்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இதன் சேவை தொடக்க நிகழ்ச்சிக்கு, ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தலைமை வகித்து, ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு உரிய ஆவணங்கள் மற்றும் சாவியை மருத்துவமனை இயக்குநா் எஸ்.எம். பிரான்சிஸ்காலிடம் வழங்கினாா். மேலும், கொடியசைத்து ஆம்புலன்ஸ் சேவையை தொடங்கி வைத்தாா்.

நிகழ்ச்சியில், மாவட்ட இணை இயக்குநா் (மருத்துவப் பணிகள்) ஜோஸ்டின் அமுதா, திருப்பூண்டி வட்டார மருத்துவ அலுவலா் அரவிந்த்குமாா், கீழையூா் ஒன்றியக் குழு தலைவா் செல்வராணி ஞானசேகரன், மாவட்ட கவுன்சிலா் கௌசல்யா இளம்பரிதி, கீழையூா் ஒன்றியக் குழு துணைத் தலைவா் பெ. சௌரிராஜ், ஊராட்சித் தலைவா் ஜெயசுதா கணேசன் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT