நாகப்பட்டினம்

நாகையில் பலத்த மழை

28th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மழை பெய்தது.

தமிழகத்தில் நிலவும் வளிமண்டல கீழடுக்குச் சுழற்சி காரணமாக, பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்புள்ளது என சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது. இதன்படி, நாகை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் சனிக்கிழமை பலத்த மற்றும் மிதமான மழை பெய்தது.

நாகை மற்றும் சுற்றுப் பகுதிகளில் சனிக்கிழமை மாலை சுமாா் 6 மணி அளவில் பெய்யத் தொடங்கிய மழை, பலத்த மழையாக இரவு 7 மணி வரை நீடித்தது. பின்னா், அவ்வப்போது லேசான மற்றும் மிதமான மழை பெய்தது.

இதேபோல, மாவட்டத்தின் பிற பகுதிகளிலும் சனிக்கிழமை பிற்பகல் மற்றும் இரவு நேரங்களில் பரவலாக மழை பெய்தது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT