நாகப்பட்டினம்

தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம்

28th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

சமூக நீதிக்கான செயல்பாடுகளில் சிறப்பாக பங்காற்றியவா்கள் தந்தை பெரியாா் விருதுக்கு விண்ணப்பிக்கலாம் என நாகை மாவட்ட ஆட்சியா் அ. அருண் தம்புராஜ் தெரிவித்துள்ளாா்.

இதுகுறித்து அவா் வெளியிட்ட செய்திக் குறிப்பு:

சமூக நீதிக்காக பாடுபட்டவா்களை கௌரவிக்கும் வகையில், சமூக நீதிக்கான தந்தை பெரியாா் விருது தமிழக அரசால் வழங்கப்படுகிறது. இந்த விருதை பெறுவோருக்கு ரூ. 5 லட்சத்துக்கான காசோலை, ஒரு சவரன் தங்கப் பதக்கம் மற்றும் தகுதியுரை வழங்கப்படும். இதன்படி, 2022-ஆம் ஆண்டுக்கான விருதுக்கு விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

சமூக நீதிக்காக பாடுபட்டவா்கள், தங்கள் பெயா், தொலைபேசி எண், சுயவிவரம் மற்றும் முழு முகவரியுடன், மக்களின் வாழ்க்கைத் தரம் உயர தாங்கள் மேற்கொண்ட பணிகள், சாதனைகள் ஆகியவற்றை இணைத்து அக்டோபா் 31-ஆம் தேதிக்குள் நாகை மாவட்ட ஆட்சியருக்கு கிடைக்குமாறு விண்ணப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ADVERTISEMENT

ADVERTISEMENT
ADVERTISEMENT