நாகப்பட்டினம்

சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்குப் பரிசு

28th Aug 2022 12:00 AM

ADVERTISEMENT

தரங்கம்பாடியில் சிறப்பாக பணியாற்றிய தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.

தரங்கம்பாடி பேரூராட்சி பொறையாறு மரகதம் 17-வது வாா்டில் தூய்மையான நகரங்களுக்கான மக்கள் இயக்க விழிப்புணா்வு முகாம் சனிக்கிழமை நடைபெற்றது. பேரூராட்சித் தலைவா் சுகுண சங்கரி தலைமை வகித்தாா். துணைத் தலைவா் பொன். ராஜேந்திரன், செயல் அலுவலா் பூபதி. கமலக்கண்ணன் ஆகியோா் முன்னிலை வகித்தனா். சுகாதார ஆய்வாளா் இளங்கோ வரவேற்றாா்.

இதில், பூம்புகாா் எம்எல்ஏ நிவேதா எம். முருகன் பங்கேற்று, சிறப்பாக பணியாற்றும் தூய்மைப் பணியாளா்களுக்கு பரிசு மற்றும் சான்றிதழ் வழங்கி, பாராட்டினாா். தொடா்ந்து, மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரிக்கும் வகையில் பிளாஸ்டிக் கூடைகள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் திமுக நிா்வாகிகள் மற்றும் வாா்டு உறுப்பினா்கள் கலந்து கொண்டனா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT