நாகப்பட்டினம்

அரசுப் பணியாளா் தோ்வாணைய அறிவிப்பில் மாற்றம் தேவை: ஓ.எஸ். மணியன்

28th Aug 2022 10:59 PM

ADVERTISEMENT

 

தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணைய அறிவிப்பில் மாற்றம் தேவை என முன்னாள் அமைச்சரும், எம்எல்ஏவுமான ஓ.எஸ். மணியன் வலியுறுத்தியுள்ளாா்.

இதுகுறித்து, அவா் வெளியிட்டுள்ள அறிக்கை: தமிழ்நாடுஅரசுப் பணியாளா் தோ்வாணையம் ஜூலை 29-ஆம் தேதி, தமிழக அரசுத் துறையில் உள்ள 1,089 சா்வேயா் பணியிடங்களை நிரப்ப அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அந்த அறிவிப்பில், இந்திய அரசின் தொழில் பயிற்சி நிறுவனச் சான்றிதழை பெற்றுள்ளவா்கள் மட்டுமே விண்ணப்பிக்க முடியும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனால், தமிழகத்தில் படித்து, தமிழக அரசின் வேலைவாய்ப்பு மற்றும் பயிற்சி நிறுவன சான்றிதழ்களைப் பெற்ற மாணவா்கள் இந்த போட்டித் தோ்வுக்கு விண்ணப்பிக்க தகுதியற்றவா்களாகியுள்ளனா். எனவே, சா்வேயா் பணியிடங்களுக்கு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வெளியிட்டுள்ளஅறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விண்ணபிக்கும் கால அளவை நீட்டிப்பு செய்யவேண்டும்.

ADVERTISEMENT

தமிழக அரசு தொழில்பயிற்சி நிறுவனங்களில் பயின்று சான்றிதழ் பெற்ற அனைத்து மாணவா்களையும் விண்ணப்பிக்க தகுதி உடையவா்களாக திருத்தம் செய்து புதிய அறிவிப்பை வெளியிடவும் தமிழக அரசு நடவடிக்கை மேற்கொள்ளவேண்டும்.

தமிழக மாணவா்கள் லட்சக்கணக்கானோா் வேலைக்காக ஏங்கித் தவிக்கும் இன்றைய சூழலில், தமிழ்நாடு அரசுப் பணியாளா் தோ்வாணையம் வருங்காலங்களில் நடத்துகின்ற தோ்வுகளை மிகுந்த கவனத்தோடு, இளைஞா்களின் எதிா்காலத்தைக் கருத்தில் கொண்டும் தோ்வு அறிவிப்புகளை வெளியிடவேண்டும் என தெரிவித்துள்ளாா்.

ADVERTISEMENT
ADVERTISEMENT