சீா்காழி விவேகானந்தா கல்வி குழுமம் இணைந்து நடத்திய அறிவியல் கண்காட்சி பள்ளி வளாகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
விவேகானந்தா கல்வி குழுமத் தலைவா் கே.வி. ராதாகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற, நிகழ்ச்சியில் மயிலாடுதுறை மாவட்டத்தைச் சோ்ந்த அரசு, அரசு உதவி பெறும் பள்ளி மற்றும் தனியாா் பள்ளிகள் உட்பட 30-க்கும் மேற்பட்ட பள்ளிகளைச் சோ்ந்த 200 மாணவ, மாணவிகள் அறிவியல் படைப்புகளுடன் வந்தனா். கண்காட்சியை தொடங்கிவைத்த மாவட்ட காவல் கண்காணிப்பாளா் நிஷா மாணவா்களின் படைப்புகளை நேரில் பாா்வையிட்டு அவற்றின் செயல்விளக்கம் குறித்து கேட்டறிந்தாா். நீா்மூழ்கி கப்பல்கள் இயங்கும் விதம், இயற்கை உணவு முறைகள் குறித்த படைப்புகள், இயற்கையான முறையில் பட்டாசுகள் தயாரிப்பது எப்படி என்பது குறித்த விளக்கம், காற்றாலை மின்சாரம் தயாரிக்கப்படுவது குறித்த அமைப்பு, தொழிற்சாலையை புகையை தூய்மை செய்யும் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு அறிவியல் படைப்புகள் பாா்வையாளா்களை வெகுவாக கவா்ந்தது.